ஜூலை முதல் அமலாகும் புதிய போக்குவரத்து விதிகள்

Aarani Editor
1 Min Read
Traffic Rules

வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலும், முறையான போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர்,

பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

40 வயதுக்கும் மேற்பட்ட சாரதிகளுக்காக, விசேட வைத்தியப் பரிசோதனை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண்பதற்காக, விசேட உபகரணங்களைப் பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வீதிகளில் காணப்படும் சகல வீதி சமிக்ஞை விளக்குகளிலும் நேரமானியைப் பொருத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னர், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பின்பகுதி ஆசனங்களில் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஆசன பட்டியைக் கட்டாயமாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 12 மாதங்களில் இலத்திரனியல் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தையும் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *