இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி வரை காலியில், பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை.
எனது தொழில் வாழ்க்கை முழுவதும் எனது உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலைகளில் எனக்காக இருந்த ஆயிரக்கணக்கான இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
எதிர்வரும் ஜூன் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எனது நாட்டிற்காக நான் விளையாடும் இறுதி டெஸ்ட் போட்டியாகும்.
தேர்வுக் குழுவினருடன் கலந்துரையாடியது போல் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
எனினும், நாட்டிற்கு தேவைப்பட்டால் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையேடுவேன் என குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
