பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான ஒத்துழைப்புக்கு பங்களிக்கும் வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில், குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பான வீட்டுவசதித் திட்டத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் ஆதரவு பொறிமுறை சீர்குலைவதால் ஏற்படக்கூடிய பரந்த மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
