பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தைகள் குறித்து விசாரிக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
தயாசிறி ஜயசேகரவின் பாராளுமன்ற நடத்தை தொடர்பாக சபாநாயகருக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமலி வீரசேகர தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
Link: https://namathulk.com/
