நுவரெலியாவில் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டாரவினால் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்கள் தனியார் பஸ்கள் மற்றும் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா ? என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது,
இதன்போது மொத்தமாக 40 வாகனங்கள் பரிசோதனை செய்ததில் 22 வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையில் ஈடுபடும் 10 பஸ்களும் , 8 தனியார் பஸ்களும் 4 லொறிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
