இலங்கையில் வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள நாணயக் கடிதங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் ஏற்கனவே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தநிலையில், 2025 ஸ்ரீஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை ஒதுக்க எதிர்பார்ப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
