இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு – அணித்தலைவராக கில்

Aarani Editor
1 Min Read
ShubmanGill

2025 ஜூன் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக அமையவுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் திகதி ஆரம்பமாகிறது.

4ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்துள்ளது.

இதன்படி இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் துணைத் தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அணியில்
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணியில் சர்பராஸ் கான், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறவில்லை.

ரோகித் சர்மாவும், விராட் கோலிவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *