10 அணிகள் இடையிலான 18 ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள 66 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இவ்விரு அணிகள் கடந்த 8ஆம் திகதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் மோதல் காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் மைதானத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டியும் பாதியில் கைவிடப்பட்டது.
அந்த போட்டி தற்போது மீண்டும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
