ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியுள்ளதாக ரஷ்யா மீது ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க, இராணுவ அக்கடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவதாகவும் ட்ரம்ப் கூறினார்.
ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியது, ஆனால் தற்போது நாங்கள் அவற்றை விட நிறைய ஏவுகணைகளை உருவாக்குவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல அதன் முக்கிய பணி தேசிய பாதுகாப்பு என கூறினார்.
Link: https://namathulk.com
