முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வலுவான முறையில் மேற்கொள்வதே இதன் நோக்கம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்மொழிவை தஹாம் சிறிசேன இன்னும் ஒப்புதல் அல்லது மறுப்பு குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும் எதிர்காலத்தில் அவர் இது குறித்து ஒரு முடிவை எடுப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
Link: https://namathulk.com
