நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக குறித்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் 245 ரூபா முதல் 250 ரூபா வரையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
