வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிசார் விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர்.
கல்லூரியில் உள்ள தனது விடுதிக்குள் இரண்டாம் ஆண்டு மாணவி உயிர்மாய்த்துக் கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டி, தெல்தெனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பாக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு கல்லூரி அதிகாரிகளுக்கு எதிராக அமைதிப் போராட்டம் நடத்தி, கல்லூரியின் ஆசிரியர்கள்தான் மாணவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
கல்லூரியில் சில விரிவுரையாளர்களின் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சல், குறித்த மாணவி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்
Link: https://namathulk.com/
