முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கை ஜூன் 23 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு தலைமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் கொழும்பிற்கு வருகை தந்தபோது, ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்கு இன்று கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, பிரதிவாதிகளுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், வேறு திகதிக்கு வழக்கு விசாரணையை மாற்றி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
