3,000 இற்கும் மேற்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு

Aarani Editor
1 Min Read
3,000 இற்கும் மேற்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு

மே 19 முதல் 24 வரை 15 மாவட்டங்களில் நடத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் 128,824 பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் 119,677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள், 789 அரசு அலுவலகங்கள், 5,025 தனியார் நிறுவனங்கள், 700 கட்டுமான தளங்கள், 195 தொழிற்சாலைகள், 263 பொது இடங்கள் மற்றும் 514 மத வளாகங்கள் அடங்கும்.

இவற்றில், 31,145 பகுதிகள் நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டன.

இதன்படி, 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதேநேரத்தில் 1,470 இடங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை காரணமாக அதிகரித்து வரும் டெங்கு அபாயத்திற்கு குறைக்கும் விதமாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோரின் உத்தரவின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நுளம்பு இனப்பெருக்கத்தைத் தடுக்க வாரத்திற்கு ஒரு முறையாவது தங்கள் வளாகங்களை தவறாமல் ஆய்வு செய்து சுத்தம் செய்யுமாறு அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *