இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தப் பட்டியல் தொடர்பான நடவடிக்கை குறித்த அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு தவறாமல் வருகை தருவதாக அவர் மேலும் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
நானும் அந்தப் பட்டியலில் இருக்கிறேன்.
காஞ்சன விஜேசேகர மற்றும் ரமேஷ் பத்திரனவும் உள்ளனர், மஹிந்தானந்த அளுத்கமகேவும் இப்படித்தான் கைது செய்யப்பட்டார்.
அமைச்சகங்களின் கீழ் உள்ள துறைகளால் நடத்தப்பட்ட விடயங்களுக்காக இந்த கைதுகள் செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த சம்பவங்கள் தொடர்பாக அமைச்சகங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
மே மாதம் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் வீரவன்ந தெரிவித்தார்.
அத்துடன், கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில், இடம்பெற்ற விடயம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் தாம் அழைக்கப்பட்டுள்ளதாக வீரவன்ச தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
