அடுத்த பருவத்திற்காக 15,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, எஞ்சிய போகங்களுக்குத் திறந்த சந்தையில், நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காகப் போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
15,000 மெட்ரிக் டன் யூரியாவை வரையறுக்கப்பட்ட அரச உரநிறுவனம் மூலம் இறக்குமதி செய்வதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
Link: https://namathulk.com/
