அடையாளம் காணப்பட்ட விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் அமைந்துள்ள பதாசாரி கடவைகளுக்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, இரவு வேளைகளில் பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக, அடையாளம் காணப்பட்ட விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் அமைந்துள்ள பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இரவில் வீதியைக் கடக்கும் பாதசாரிகளைச் சாரதிகளுக்கு இலகுவில் அடையாளம் காட்டும் எனவும், விபத்து அபாயத்தைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல், காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில், இது போன்ற 140 பாதசாரி கடவைகள் ஏற்கனவே ஒளிரச் செய்யப்பட்டுள்ளன.
பாதசாரி கடவைகளில் ஏற்படும் விபத்துகளால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழப்பதால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
