அரசாங்கத்தின் உண்மையான திட்டம் அம்பலப்படுத்தப்பட்டமையால் தான் காணி சுவீகரிப்பு குறித்து அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானியை மீளப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அத்துடன் இந்த விடயத்தில் தாங்கள் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
அத்துடன், வடக்கில் 70 சதவீதமான மக்களுடைய காணிகளின் உரித்து தொடர்பில் சிக்கல் இருப்பதாகவும் காலங்காலமாக தீர்க்கப்படாமல் இருப்பதனால் அதனை தீர்ப்பதற்கான முயற்சியாகவே அரசாங்கம் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்த விடயம் குறித்து நாங்கள் சந்தித்த வெளிநாட்டு தூதுவராலயங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் அந்தக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர் என தெரிவித்தார்.
Link: https://namathulk.com/
