இலங்கை பிரதிநிதிகள் குழு, அமெரிக்கா விதித்த தீர்வை வரி தொடர்பாக, வொஷிங்டன், டிசியில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது சுற்றுச் சந்திப்பு இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரில், வொஷிங்டன் டிசியில் நடந்த முதலாவது சுற்றுக் கலந்துரையாடல்களில் இலங்கை பிரதிநிதிகள் குழு வரி தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
