விசேட அரச ஊழியராக செயல்படுவதற்கு வழங்கப்பட்ட காலம் நிறைவடைந்துள்ளதால், அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறை திணைக்களத்திலிருந்து விலகுவதாக எலான்; மஸ்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரச நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக ‘டாட்ஜ்’ என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.
தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில்,
“சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
