யாழில் பென்ட்ரைவினை (Pendrive) இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – அத்தியடி ஜேஃ78 கிராம சேவகராக கடமை புரிந்தவரே இவ்வாறு இலஞ்சமாக பென்ட்ரைவினை பெறுவதற்கு முயற்சித்தவேளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
