இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் திகதி லீட்சில் தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Link: https://namathulk.com/
