குஜராத்-மும்பை அணிகள் இன்று மோதல்

Aarani Editor
0 Min Read

10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும்.

இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *