நாட்டிற்குள் போதைப்பொருளைக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் இத்தாலியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10 கிலோ 232 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறுவர்கள் விளையாடும் பொம்மைகளுக்குள் சூட்சுமமாக போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Link: https://namathulk.com/
