ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
சண்டிகரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சூழற்சியில் வென்ற மும்பை துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன், 3வது இடத்தை பிடித்தள்ளார்.
Link: https://namathulk.com/
