மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், அதனால் மில்லகந்த பகுதியில் பாரிய வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மழையுடனான வானிலையை அடுத்து நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
நேற்று பிற்பகல் முதல், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எனவே, நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Link: https://namathulk.com
