சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது விமான சேவையில் புதிய எயார்பஸ் A330-200 விமானத்தை சேர்க்கவுள்ளது.
குறித்த விமானத்தை ஜூன் 4 ஆம் திகதி இணைப்பதன் மூலம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் அதன் நீண்ட தூர விமானத் திறன்களை மேம்படுத்த உள்ளது.
4R-ALT என பதிவு செய்யப்படவுள்ள இந்த விமானம், இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் ட்ரென்ட் 772B-60 எஞ்சின்களால் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய விமானம், விமான நிறுவனத்தின் பெரும்பகுதி செயல்பாடுகளை வலுப்படுத்தும் என்பதுடன் சர்வதேச இணைப்பை விரிவுபடுத்துவதற்கான உத்தியை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, சிறிலங்கள் எாயர்லைன்ஸ் தனது விமான சேவையை நவீனமயமாக்குவதற்கும் நீண்ட தூர வழித்தடங்களில் சேவை வழங்கல்களை மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இதேவேளை, விமானம் சேவையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com
