சிந்துப்பாத்தி மயானத்தில் சிறுவர்கள் , பெண்களின் எலும்புக்கூடுகள் – அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்

Aarani Editor
1 Min Read
Sinthupaththi

யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துப்பாத்தி மயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரியாலை – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழியில் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் எலும்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இங்கு அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன

வேறு இடங்களில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களே இங்கு எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அதற்குச் சான்றாகப் புதைகுழியில் காணப்படும் எலும்புக்கூடுகள் ஓர் ஒழுங்கு முறையாகவோ அல்லது சாதாரணமாகவோ காணப்படவில்லை.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

சுமார் 20 வருடங்களை அண்டிய காலப் பகுதியில் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகளே இங்கு அடையாளம் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதிகளில் தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று மனித மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் மனிதப் புதைகுழி என அதனை பிரகடனப்படுத்த முடியும் என்ற நிபந்தனைக்கமைய குறித்த பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி யாழ்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் விண்ணப்பத்தை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *