சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள், பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
Link: https://namathulk.com
