மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன் – வவுனியாவில் பயங்கரம்

Aarani Editor
1 Min Read
Vavuniya Crime

வவுனியா – புளியங்குளத்தில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து பையில்; எடுத்துக்கொண்டு கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (06) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலை செய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கணவன் – மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது.

இந்த விவகாரத்தை பொலிஸாருடைய தலையீட்டுடன் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி கணவன் தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும் நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் , பின்னர் தலைப்பகுதியை பிளாஸ்டிக் பையில் எடுத்துக்கொண்டு புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிசார் உடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *