வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான வாகனங்களின் விற்பனையால் அரசுக்கு 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
ஒரு BMW மற்றும் பல டொயோட்டா பிராடோ உட்பட 12 வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் அரசு 28 மில்லியன் ரூபாய்களை மட்டுமே சம்பாதித்துள்ளதாக தயாசிறி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
வாகன சந்தையில், ஒரு BMW மட்டும் 35 மில்லியன் ரூபா மதிப்புடையது, அதே நேரத்தில் ஒரு பிராடோ சந்தையில் 20.5 மில்லியன் மதிப்புடையது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லாமையே நட்டத்துக்கு காரணம் எனவும் ஜெயசேகர கூறியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுக்களை வடமத்திய மாகாண சபை முற்றாக மறுத்துள்ளது, அவரது கூற்றுகள் தவறானவை எனவும் அவதூறானவை எனவும் கூறியுள்ளது.
வாகனங்கள் முறையான டெண்டர் செயல்முறை மூலம் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவித்த மாகாண சபை அதிகாரிகள் தவறான கருத்துக்களை பரப்பியமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com
