கடந்த மாதம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 130,000 ஐ தாண்டியுள்ளது.
அதன்படி, 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
Link: https://namathulk.com
