திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அவர் அறிக்கை கோரியுள்ளார்.
Link: https://namathulk.com
