இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன் முறையாகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
இதனையடுத்து, 18ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், சிறந்த பிடியெடுப்புக்கான விருதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கமிந்து மெண்டிஸ் தன்வசப்படுத்தினார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறந்த பிடியெடுப்பொன்றை நிகழ்த்திய நிலையில் அவருக்கு குறித்த விருது வழங்கப்பட்டது.
அத்துடன் அதிக சிக்சர்களை விளாசிய வீரருக்கான விருதை லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் வென்றார்.
அதிக ஓட்டமற்ற பந்துகளை வீசிய வீரருக்கான விருது மொஹமட் சிராஜிற்கு வழங்கப்பட்டது.
தொடரில் மொத்தமாக 759 ஓட்டங்களைப் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் செம்மஞ்சள் தொப்பியைத் தனதாக்கினார்.
அதேநேரம், தொடரில் மொத்தமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிரசித் கிருஷ்ணா ஊதா தொப்பியை தனதாக்கினார்.
Link: https://namathulk.com
