தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

Aarani Editor
0 Min Read
korea

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவில் நேற்றையதினம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய லீ ஜே-மியுங் வெற்றிப் பெற்றார்.

சர்ச்சைக்குரிய தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலேயே அவர் வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய லீ ஜே-மியுங் 49.31 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அவருடன் போட்டியிட்ட கிம் மூன் சூ 41.30 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *