இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.
குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
191 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் சஷாங்க் சிங் 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 18 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன் முறையாகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com
