ஐபிஎல் கிண்ணத்தை ஆர்சிபி அணி வென்ற நிலையில், அதன் வெற்றிக் கொண்டாட்டம் நேற்றையதினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 50ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெளியே உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் உள்ளே வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியதாக ஆர்சிபி அணி மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஆர்சிபி அணி கூட்ட நெரிசலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
குறித்த அறிக்கையில், “அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூருவில் கூடிய கூட்டத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்ததாக ஊடக அறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையறிந்துள்ளோம்.
அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.துயரமான உயிர் இழப்புக்கு ஆர்சிவி இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நிலைமை குறித்து உடனடியாகத் தெரியவந்தவுடன்.
நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தைத் மாற்றியமைத்து, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம்.
எங்கள் இரசிகர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
