ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி அறிவித்துள்ளது.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையையும். இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக கே.எஸ்.சி.ஏ தலைமை நிதி அதிகாரி சிவாஜி லோகரே அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர் இடம்பெற்ற கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 6 பேர் அடங்குகின்றனர்.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்தியன் ப்ரீமியர் லீக் கிண்ணத்தை வெற்றிகொண்டதை அடுத்து பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நேற்று வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவசர ஏற்பாடுகள், போதுமான திட்டமிடல் இன்மை உள்ளிட்ட காரணிகளால் இந்த சம்பவம் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Link: https://namathulk.com
