யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த மயானத்தில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது.
இதேவேளை இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணி இந்து மயானத்தில் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த விடயம் குறித்து நேற்றையதினம் பாராளுமன்றத்திலும் கருத்து தெரிவிக்ப்பட்டது.
Link: https://namathulk.com
