நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.
நேற்று காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எட்டப்படவில்லை என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் செயலாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com
