சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிக்குமாறு அரசாங்கம் ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை, மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிப்பதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தையும் தொடர்புபடுத்தி கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இவ்விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.
விசாரணைகளின் பின்னர் உண்மை வெளிவரும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com
