சிக்கலில் மாட்டும் அதிமுக்கிய அரசியல்வாதி – நெருக்கடியில் ராஜபக்சர்கள்

Aarani Editor
1 Min Read
RajapaksaFamily

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திஸ்ஸமஹாராமவில் உள்ள அவரது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தவறான தகவலை அளித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்திடமிருந்து ஒரு கோடியே 50 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சமல் ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் உள்ள சொத்து சமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல, மாறாக வேறொருவரின் பெயரில் உள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

மேலும் அங்கு வீடு இல்லை எனவும் அங்கு நெல் களஞ்சியசாலை மட்டுமே இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சொத்து சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, 2023ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 27ஆம் திகதி அன்று, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ், குறித்த கொடுப்பனவுகளை தங்கள் அதிகார வரம்பின் கீழ் செய்ய முடியாது என இழப்பீட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *