தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் வடக்கே அடகாம பாலைவன பகுதியருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சிறிய அளவில் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை சிலி நாட்டின் ஜனாதிபதி கேப்ரியேல் போரிக் உறுதி செய்துள்ளார்.
Link: https://namathulk.com
