நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கிய ஊழல் எதிர்ப்பு குழு அலுவலகத்திலிருந்து, பல கோப்புகள் காணாமல் போயுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் அவர்,
முறைப்பாட்டு பதிவுகள் மற்றும் குழுவின் உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பான கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணவில்லை என கூறினார்.
கோப்புகளுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 2022இல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றபோது, அவற்றை அகற்றினாரா என்பது எங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்புக் குழு 2015இல் அமைச்சரவை ஒப்புதலுடன் நிறுவப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதன் தலைவராக பணியாற்றினார்.
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் குழுவின் உறுப்பினராக இருந்தார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com
