யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான விசாரணையின் வெளிப்படைத்தன்மையை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், சித்துப்பாத்தி மயானத்தில் உள்ள மனித புதைகுழி என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான நீண்டகாலமாக தாமதமாகி வரும் உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
விசாரணையை வழிநடத்தும் நீதித்துறை மருத்துவ அதிகாரி 45 நாள் நீட்டிப்பு கோரியுள்ளதாகவும், அடுத்த கட்டத்திற்கான செலவு மதிப்பீட்டை சமர்ப்பிக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னிப்புச் சபை, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வாராய்ச்சி நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

