நேஷன்ஸ் லீக் காற்பந்து தொடரில் 2ஆவது முறையாக போர்த்துகல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் அணிகள் மோதின .
போட்டியின் 45ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி 2 -1 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் 69ஆவது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் ஒன்றினை பெற்றுக் கொடுத்து போட்டியை 2-2 எனச் சமன் செய்தார்.
இதனையடுத்து பெனால்டிஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, போர்த்துகல் அணி UEFA நேஷன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.
Link: https://namathulk.com
