முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றபோது, தான் அவரை எதிர்த்ததாகவும், அவர்களை போன்ற குற்றவாளிகளிகளை தற்போது நாட்டுக்கு அழைத்து வருவது சாத்தியமில்லாத விடயம் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணைளார் நாயகம் துஷார உப்புல்தெனிய நேற்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நபர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தை ஆச்சரியப்படுத்தும் தகவல்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாக திலீப பீரிஸ் கூறியுள்ளார்.
Link: https://namathulk.com
