மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15 வீத மின்சார கட்டண உயர்வை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது நியாயமற்றது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ‘நியாயமான செலவுத் தொகை’ என்ற கொள்கையை சரியாக பின்பற்றியிருந்தால், இந்த உயர்வு சாத்தியமே இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 15 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சாரசபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முடிவை எங்களது சங்கம் வலுவாக எதிர்க்கிறது.
எதிர்வரும் நாட்களில் மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம், என மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com
