முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் பௌத்த விகாரை வடிவிலான உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பில் மகிந்த தேரரின் இலங்கை வருகையையும் பௌத்த மதத்தினை ஸ்தாபித்தல் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், நேற்றையதினம் இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட குறித்த பதாகை கிழித்தெறியப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com
