இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன்
அந்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்தார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் அமைச்சின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட எச். எம். பி. அபேகோன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கரையொதுங்கும் பொருட்களை அகற்றும் பணிகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Link: https://namathulk.com
